\
ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு... வாகனங்கள் சிறைபிடிப்பு

ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு... வாகனங்கள் சிறைபிடிப்பு

ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு... வாகனங்கள் சிறைபிடிப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு ஆய்வு பணி மேற்கொள்ளச் சென்ற ஓஎன்ஜிசி அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ‌ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெடுவாசல் பகுதியில் ஆய்வு செய்ய ஒஎன்ஜிசி அதிகாரி விஜயேந்திர பட்டேல் தலைமையில் பொறியாளர்கள் உள்ளிட்டோர் சென்றனர். அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப‌ட்டனர். கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், மக்களின் போராட்டம் குறித்து அரசிடம் தெரிவிப்பதாக கூறினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com