”பெருமைமிக்க தமிழ் மன்னர்களை தமிழக மக்கள் கொண்டாடுவதில்லை”- நீதிபதிகள் வேதனை

”பெருமைமிக்க தமிழ் மன்னர்களை தமிழக மக்கள் கொண்டாடுவதில்லை”- நீதிபதிகள் வேதனை
”பெருமைமிக்க தமிழ் மன்னர்களை தமிழக மக்கள் கொண்டாடுவதில்லை”- நீதிபதிகள் வேதனை

ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்கக்கோரிய மனு மீதான விசாரணையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

( சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலான திரைப்படம்)

கோயம்புத்தூரைச் சேர்ந்த தியாகராசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “ தமிழகத்தில் பெருமை வாய்ந்த கோயில்களை கட்டியவரும், மிகச் சிறப்பான ஆட்சி செய்த மன்னருமான ராஜராஜ சோழனின் உடலனாது தஞ்சாவூர் மாவட்டம் உடையளூர் கிராமத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

அந்த இடம் கைலாசநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடமாக உள்ள நிலையில், அந்த இடம் எவ்வித பராமரிப்பின்றி ஓலைக்குடிசைக்கு அடியில் உள்ளது. அதில் ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. ஆகையால் இவ்வளவு பெருமை வாய்ந்த ராஜராஜ சோழனுக்கு நினைவு சின்னம் அமைக்கவும், லிங்கத்தைச் சுற்றி சுற்றுசுவர் எழுப்பவும் அனுமதி அளிக்க வேண்டும். மண்டபத்தை கட்டிய பின்பு அதில் எவ்வித உரிமையையும் நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் இந்துசமய அறநிலையத் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருப்பணி வேலைகளை முடித்து தருகிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையானது இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் “ தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்கள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுவது இல்லை. மும்பையில் ஆட்சி செய்த மன்னர்களை அங்கு உள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பெருமை மிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை” என்றனர்.

மேலும் ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு குறித்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com