\
கடும் போக்குவரத்து நெரிசல்
கடும் போக்குவரத்து நெரிசல்pt desk

சென்னைக்கு திரும்பும் தென் மாவட்ட மக்கள்... சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் இன்று மீண்டும் ஒருசேர சென்னைக்குத் திரும்புவதால், சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், ஞாயிறுக்கிழமை என இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் சுப முகூர்த்தம் காரணமாக கடந்த வியாழன், வெள்ளி தினங்களில் சென்னையில் இருந்த தென் மாவட்ட மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று அம்மக்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்பியுள்ளனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்
கடும் போக்குவரத்து நெரிசல்pt desk

இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுங்கச் சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: 360 டிகிரி கேமராக்கள் கொண்ட வாகனங்களில் ரோந்து!

இதையடுத்து இந்த கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கூடுதல் பூத் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கபட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com