4 நாட்களாக மின்சாரம் இல்லை.. கும்மிருட்டு.. கொசுக்கடி.. தவிக்கும் ராமேஸ்வரம் மக்கள்!

4 நாட்களாக மின்சாரம் இல்லை.. கும்மிருட்டு.. கொசுக்கடி.. தவிக்கும் ராமேஸ்வரம் மக்கள்!

4 நாட்களாக மின்சாரம் இல்லை.. கும்மிருட்டு.. கொசுக்கடி.. தவிக்கும் ராமேஸ்வரம் மக்கள்!
Published on

புரெவி புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமேஸ்வரத்தின் அருகே நிலை கொண்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. சாலைகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வீடுகளையும் விட்டுவைக்க வில்லை. மழைநீர் செல்ல வழியில்லாமல் கோயில்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.


இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இன்றி  பொதுமக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மின்சாரம் துண்டிப்பால் ஏடிஎம் இயந்திரங்களும் இயங்கவில்லை. இதனால் மக்கள் தங்களது அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாததால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் இரவில் கடுமையான கொசுக்கடியும் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகள் இல்லாததால் தங்களது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com