மக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

மக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

மக்கள் நோயில்லாமல் வாழ நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி
Published on

தமிழக மக்கள் நோயில்லாமல் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு கையடக்க கணினிகளை முதலமைச்சர் வழங்கினார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவைச் சாப்பிடுவதற்காக மாதந்தோறும் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கூறிய அவர், பல்வேறு பகுதிகளுக்குச் நேரடியாக சென்று மக்களுக்கு காசநோய் உள்ளதா எனக் கண்டறியும், கருவிகள் அடங்கிய வாகனங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழக மக்கள் நோயில்லாமல் வாழ அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், 2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com