தமிழ்நாடு
சாலையில் உலாவரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையில் உலாவரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
கோத்தகிரி அருகே காட்டு யானை அடிக்கடி குட்டியுடன் சாலையில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சபனைப் பகுதியை சுற்றிலும் முள்ளூர், கோழிக்கரை, செம்மனாரை, போன்ற பழங்குடியின கிராமங்கள் உள்ளன. தற்போது இங்கு பலாப்பழம் சீசன் நடந்து வருவதால், சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானை குட்டியுடன் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது.
இந்த யானைகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையிலும், தேயிலை மற்றும் காபி தோட்டங்களிலும் அவ்வப்போது உலா வருவதால், வாகன ஓட்டிகளும், தோட்டத் தொழிலாளர்களும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

