”மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்”- பதவியேற்பு விழா செல்லும்முன் ரஜினிகாந்த் பேட்டி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்file

செய்தியாளர்: சந்தானகுமார்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்...

நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கப் போகிறார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

modi
modiX

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோகியமான அறிகுறி” என்றார்.

அடுத்த 5 ஆண்டுகள் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த்
இன்று இரவு பதவியேற்பு; மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அங்கீகாரம் பெற்றது தொடர்பான கேள்விக்கு... சீமானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com