\
மெரினாவில் கூடிய மக்கள்
மெரினாவில் கூடிய மக்கள்pt web

தீபாவளிக் கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

தீபாவளி நாளில் சென்னை மெரினா கடற்கரையில் திரளான மக்கள் குவிந்தனர்.
Published on: 

உலகின் அழகிய கடற்கரைகளில் ஒன்றாக பெயர் பெற்ற மெரினா கடற்கரையில் காணும் பகுதிகளில் எல்லாம் மனிதத் தலைகள். அலைகளில் கால் நனைத்து விளையாடியும், மணலில் அமர்ந்து கதைகள் பேசியும் காற்று வாங்கியபடி மாலை நேரத்தை மகிழ்வான நேரமாக்கிக் கொண்டிருந்தனர் மக்கள். தீபாவளி பண்டிகையையொட்டி காலையில் குடும்பத்தோடு கொண்டாடிய நிலையில், மாலை நேரத்தில் கடற்கரைக்கு வந்தனர்.

தலை தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதியர், வேலைக்குச் செல்லும் நடுத்தர குடும்பத்தினர் என பல தரப்பட்டவர்களும் மெரினா கடற்கரையில் கூடி பண்டிகை விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com