உருமாறிய கொரோனா வைரஸை நினைத்து அச்சப்படத் தேவையில்லை- விஜயபாஸ்கர்

உருமாறிய கொரோனா வைரஸை நினைத்து அச்சப்படத் தேவையில்லை- விஜயபாஸ்கர்
உருமாறிய கொரோனா வைரஸை நினைத்து அச்சப்படத் தேவையில்லை- விஜயபாஸ்கர்

இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2800 பேர் மூன்று அடுக்கு வளையத்தில் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். 

இன்று  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும்போது, “ லண்டனிருந்து வந்தவரின் மாதிரி ஆய்வில் உள்ளது. அவரோடு பயணித்த 37 பேரில் 33 பேருக்கு தொற்று இல்லை. கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை, காவல் துறை ,உள்ளாட்சித் துறை என 3 அடுக்கு வளைய கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் உருமாறிய புது வகையான வைரஸை நினைத்து தேவையற்ற பதட்டமோ பயமோ கொள்ள வேண்டாம். நீலகிரி உள்ளிட்ட எந்த மாவட்டத்திற்கும் இங்கிலாந்திலிருந்துவந்தாலும் அவர்கள் முழுமையாக மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com