ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் ஃபேஸ்புக்

"நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என மக்கள் தீர்மானித்துள்ளனர்" - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும், பாஜக கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பார் என்றும் உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
Published on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ” நீட் தேர்வை ரத்து செய்வதற்கும் ”அனைவருக்கும் ஆயிரம் ரூபாய்” என்னும் திட்டத்திற்கு கையெழுத்து போடுவதற்கும் தேவையான பேனாவை உசிலம்பட்டியில் இருந்து அனுப்பி வைக்கிறோம். கையெழுத்து போடுங்கள்.

உதயநிதி ஸ்டாலின் - ராகுல் காந்தி
உதயநிதி ஸ்டாலின் - ராகுல் காந்திஃபேஸ்புக்

ஆனால் உதயநிதியோ, ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் கையெழுத்து போடுகிறாராம் என்கிறார். ”கடல் வற்றிய பின் மீனை சாப்பிட காத்திருக்குமாம் கொக்கு” என்பதைபோல, கடைசியில் காத்திருந்த கொக்கு வயிறு வற்றி செத்துவிடும் என்ற கதையாக இருக்கிறது உதயநிதியின் பேச்சு.

பாரத பிரதமர் நரேந்திர மோடிதான் என்று இந்த நாட்டு மக்கள் தீர்மானம் செய்திருக்கிறார்கள். ஆனால் இங்கோ, ராகுல் காந்தி பிரதமராக வந்த பின் நீட் தேர்வை ரத்து செய்வோம் என இவர்கள் சொல்கிறார்கள் .

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிடைக்கும் உரிமைத்தொகையானது எங்களுக்கு கிடைக்கவில்லை என்று பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் சொல்கிறார்கள். இந்த நாட்டில் யார் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கான ”பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் ” என்று இதற்கு பெயர் வைத்து இருக்கலாம் .

ஏனென்றால் சொத்து இருந்தால் தரமாட்டோம், நகை இருந்தால் தரமாட்டோம், எது இருந்தாலும் தர மாட்டோம் என சொல்கிறார்கள். எனவே எங்களது கோரிக்கை என்னவென்றால் 2 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், சாமானியர்களுக்கும் இத்திட்டம் சென்று சேரவில்லை என்றால் போராடுவோம். இல்லையெனில், இபிஎஸ் முதல்வராக வருவார். எல்லோருக்கும் தருவார் ” என்றார்.

EPS
EPSPt Web

இதனைத்தொடர்ந்து பாஜக உடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலில் மலுப்பலான பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், பாஜக கூட்டணி குறித்து எங்கள் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்று பின்னர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com