\
காய்கறிகள்
காய்கறிகள்meta ai

அத்தியாவசியப் பொருட்கள் விலை 20% உயர்வு.. பொருட்களை வாங்குவதைக் குறைத்த குடும்பங்கள்!

அத்தியாவசியப் பொருட்களின் விலை 20% உயர்ந்த நிலையில் பொருட்களை குறைந்த அளவில் குடும்பங்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

சென்னையில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலை ஆகஸ்டில் சராசரியாக 20% உயர்ந்து, சாதாரண குடும்பங்கள் வாங்கும் அளவை குறைக்கத் தள்ளியுள்ளது. நீண்ட வறண்ட காலநிலை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, அடுத்த மாதங்களில் மழை இல்லையெனில் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. அரசின் மானிய வெங்காய விற்பனை மக்களுக்கு போதாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலை ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பது மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. வழக்கத்தைவிடக் குறைவான அளவில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் அளவுக்கு விலைவாசி உயர்வு சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

அரிசி
அரிசிபுதியதலைமுறை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நீண்ட வறண்ட வானிலையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் போதுமான அளவு மழை பெய்யவில்லை என்றால் காய்கறி விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. உளுந்தம் பருப்பு 250 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 235 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் தேங்காய் எண்ணெய் விலை, தற்போது மேலும் உயர்ந்து கிலோ 310 ரூபாய் வரை விற்பனையாகிறது. காய்கறிகளில் கேரட் மற்றும் பீன்ஸ் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும், வெங்காயம் 70 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. அதேபோல மிளகாய் 380 ரூபாய், பூண்டு 320 ரூபாய், மிளகு 940 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ 35 ரூபாய் என மானிய விலையில் அரசே வெங்காயம் விற்பனையைத் தொடங்கியிருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

காய்கறிகள்
பணவீக்கம் | விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்கள் கூறும் யோசனைகள் என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com