\
கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மது வாங்க குவிந்த கூட்டம் - போலீஸ் குவிப்பு

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மது வாங்க குவிந்த கூட்டம் - போலீஸ் குவிப்பு

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மது வாங்க குவிந்த கூட்டம் - போலீஸ் குவிப்பு
Published on: 

கடலூரில் உள்ள மிலிட்டரி கேன்டீனில் மது வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததால், காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள மிலிட்டரி கேன்டீன் இன்று திறக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் ஏராளாமானோர் மது வாங்குவதற்காக குவிந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் மட்டுமே, மதுபாட்டில்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என எச்சரித்தனர்.

அதனையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்திய பிறகு விற்பனை தொடங்கப்பட்டது. இன்றுதான் மிலிட்டரி கேன்டீனில் மீண்டும் மது விற்பனை தொடங்குவதால் இந்த அளவு கூட்டம் எனகேன்டீன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com