டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்: திருவள்ளூர் எம்.பி

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்: திருவள்ளூர் எம்.பி
டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்: திருவள்ளூர் எம்.பி

புதுடெல்லியில் மத்திய அரசு தனக்கு ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினராக உள்ள ஜெயக்குமார், புது டெல்லியில் 116, South Avenue,  Near President Estate, New Delhi - 110011 முகவரியில் தமக்காக உள்ள மத்திய அரசு வீடு ஒன்றை ஒதுக்கியுள்ளது.

இதில், தமிழகத்திலிருந்து வேலைதேடி டெல்லிக்கு வருபவர்கள், கல்வி கற்க வரக்கூடிய மாணவர்கள், டெல்லியை சுற்றிப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கு தமக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வீட்டை பயன்படுத்தி தங்கிக் கொள்ளலாம். தமது தொகுதி மக்கள் தங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கவும், அந்த இல்லத்தை பராமரிக்க ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com