‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ - கலக்கும் காவல்துறை

‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ - கலக்கும் காவல்துறை

‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ - கலக்கும் காவல்துறை
Published on

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு குறும்படங்களை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் சைபர் கொள்ளையர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. சைபர் மோசடி தொடர்பாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம் குற்றவாளிகளை பிடிக்க முனைப்புக்காட்டி வரும் காவல்துறை மறுபுறம் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டு குறும்படங்களை வெளியிட்டுள்ளது சென்னை பெருநகர காவல்துறை.

முருகப்பா குழுமத்தின் உதவியுடன் #GoodNetizenGoodCitizen மற்றும் USHAAR USERS Vs SAGALAKALA POOCHANDI எனப் பெரியடப்பட்டுள்ள இரண்டு குறும்படங்களை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்ந்தால் என்ன நடக்கும்? மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் குறும்படம் உள்ளது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள ‘நேர்ல செய்ய மாட்டேன்னா நெட்ல செய்ய மாட்டேன்’ பாடல் வரிகள் இன்றைய இளம் தலைமுறையினரை கவரும்படியாக உள்ளது.

குறும்பட வெளியீட்டு விழாவில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் கவனமுடன் கையாள வேண்டும் என அறிவுத்தினார். சைபர் மற்றும் வங்கி மோசடி தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் குறும்படம் ஒன்றை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com