\
கோவையில் கஞ்சா விற்றவருக்கு அடி உதை

கோவையில் கஞ்சா விற்றவருக்கு அடி உதை

கோவையில் கஞ்சா விற்றவருக்கு அடி உதை
Published on

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை துடியலூர் பகுதியில் அசோகபுரம் அரசு பள்ளி முன்பாக கஞ்சா விற்ற நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக கூறி அப்பகுதி மக்கள் நிகான் என்ற நபரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த நபரின் பையில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். நிகான் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை‌ நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com