"அடேங்கப்பா...” - 120 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை.. குமுறும் மக்கள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்த நிலையில், சில்லறை கடைகளில் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2 நாட்களாக தக்காளி விலை குறைந்துவந்த நிலையில், இன்று தரத்துக்கு ஏற்ப ஒரு கிலோ 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக, நாள்தோறும் ஆயிரத்து 100 டன் தக்காளி விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில், இன்று 400 டன் மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தேவைக்கு ஏற்ற அளவில் தக்காளி வரத்து இல்லாததே விலை உயர்வுக்கு காரணம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com