”ஆட்டோவ காப்பாத்துங்க” வெள்ளக்காடான தென் மாவட்டங்கள்; மிதக்கும் வீடுகள்; தொடரும் மீட்புப்பணிகள்!

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை
தென் மாவட்டங்களில் கனமழைpt web

இந்நிலையில், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஒன்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில், ஆட்டோவைக் காப்பாற்றுங்கள் என உரிமையாளர் சத்தம் காட்சிகளும், ஆட்டோவை மீட்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

திருச்செந்தூரில் பந்தல் மண்டபத்தில் உள்ள சிவன் கோவில் வளாகத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது. தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்ததால் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு கூட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் பொட்டல், புதூர், கடையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு வினாடி வெள்ளம் அதிகரித்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com