குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்: பால் வாங்க டிராக்டரில் பயணம்

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்: பால் வாங்க டிராக்டரில் பயணம்

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்: பால் வாங்க டிராக்டரில் பயணம்
Published on

சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான கோவிலம்பாக்கத்தில் மழை நீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது.

சென்னை புறநகர் பகுதியான கோவிலம்பாக்கம் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள பகுதி இது. இந்த இடத்தில் தொடர் மழை காரணமாக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக தரைத்தளங்களில் வசிப்பவர்கள் மாடிகளுக்கு குடிபெயர்ந்தனர். அத்யாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக கோவிலம்பாக்கம் பகுதி மக்கள் கூறுகிறார்கள்

கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாத சூழலில், வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். மழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன. தொடர் மழை மேலும் பாதிப்புகளை அதிகரிக்கும் என்பதால் கோவிலம்பாக்கம் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com