இந்தியக் கப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்

இந்தியக் கப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்

இந்தியக் கப்பற்படை கண்காட்சியைக் காண குவியும் மக்கள்
Published on

இந்தியக் கப்பற்படை கண்காட்சியைக் காண இன்று சென்னை தீவுத்திடலில் ஏராளமானோர் குவிந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை முன்னிட்டு, இந்திய கப்பற்படையின் சயாத்ரி, ககேத்திரா, சுமித்ரா, ஹராவத் உள்ளிட்ட நான்கு போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றும் நாளை மறுநாளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்காக சென்னை தீவுத்திடலில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 12 பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சென்னை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கப்பல்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் தீவுத்திடலில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.‌ ஒரு நாளில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கப்பல்களைக் காண அனுமதி என்று கூறப்பட்ட நிலையில், ஏராளமானோர் அனுமதிச் சீட்டு பெற்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com