பெருநகர சென்னை மாநகராட்சிஎக்ஸ் தளம்
தமிழ்நாடு
வரியை நிலுவையில் வைத்துள்ளவர்களின் விவரங்கள் வெளியீடு - சென்னை மாநகராட்சி அதிரடி!
வரியை நிலுவையில் வைத்திருக்கும் உரிமையாளர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வசூலிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி மும்மரமாக களமிறங்கியுள்ளது.
வரியை நிலுவையில் வைத்திருக்கும் உரிமையாளர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வசூலிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி மும்மரமாக களமிறங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிஎக்ஸ் தளம்
சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு 1,700 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக நிறுவனங்களிலும் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் பலர் நீண்ட காலமாக வரியை செலுத்தாமல் நிலுவை வைத்து இருக்கின்றனர்.
எதிர்ப்பு எதிரொலி | ”கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படாது” - சென்னை மாநகராட்சி மேயர் அறிவிப்பு!
மாநகராட்சிக்கு வரக்கூடிய வரி வருவாய் நிலுவையில் இருப்பதால், பல திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, வரியை நிலுவையில் வைத்திருக்கும் உரிமையாளர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வசூலிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.