”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் குப்பைக் கொட்டினால் அபராதம்”  - சென்னை மாநகராட்சி

”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் குப்பைக் கொட்டினால் அபராதம்” - சென்னை மாநகராட்சி

”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் குப்பைக் கொட்டினால் அபராதம்” - சென்னை மாநகராட்சி
Published on

”பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மேலும், ”பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி அபராதம் விதிக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 01.01.2022 முதல் 18.03.2022 வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.24.63 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com