ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம்: யார் யார் வசூலிக்கலாம்?

ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம்: யார் யார் வசூலிக்கலாம்?
ஊரடங்கை மீறுவோருக்கு அபராதம்: யார் யார் வசூலிக்கலாம்?

ஊரடங்கை மீறுவோருக்கு யார் யார் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராதம் வசூலிக்கலாம். காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு கீழ் இல்லாதவர்கள் அபராதத் தொகையை வசூலிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கை மீறுவோருக்கு தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com