பேனா நினைவு சின்னம்: "சீமானின் `உடைப்பேன்’ என்ற கருத்தும் அப்படியே பதிவு!"

பேனா நினைவு சின்னம்: "சீமானின் `உடைப்பேன்’ என்ற கருத்தும் அப்படியே பதிவு!"
பேனா நினைவு சின்னம்: "சீமானின் `உடைப்பேன்’ என்ற கருத்தும் அப்படியே பதிவு!"

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவிய சூழலில், பயங்கர சலசலப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி ‌ 31 தேதி  கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆயிரத்தரசு ராஜசேகர், பேனா நினைவு சின்னம் திட்டத்தின் சுற்றுச்சூழல் ஆலோசகர் ஜே.ஆர்.மோசஸ் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி பேசினர்.

பெரும் சலசலப்பு கூட்டத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, எபனேசர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பா.ஜ.க. மீனவர் அணி தலைவர் முனுசாமி மற்றும் செம்மலர் சேகர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சங்கர், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி, அனைத்து மீனவர்கள் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் அருள் முருகானந்தம், இளங்கோ, சமூக செயற்பாட்டாளர் முகிலன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் முழு விவரங்கள் மாவட்ட ஆட்சியர்  கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா அமைக்க 22 பேரும், அமைக்க கூடாது என்று 12 பேரும் தெரிவித்த கருத்துக்களின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. `பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைப்பேன்' என சீமான் பேசியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com