\
கிணற்றில் விழுந்து தவித்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்து தவித்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்து தவித்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மயிலை, தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் பெரியய்யா என்பவருக்குச் சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தேசிய பறவை மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. கிணற்றிலிருந்து மீளமுடியாமல் தவித்த அந்த மயில் பார்த்த அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், வீரர் ஒருவரை கிணற்றில் இறங்கி அந்த மயிலை பத்திரமாக மீட்டனர். இதன் பின்பு அந்த மயில் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com