உடற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்pt desk
தமிழ்நாடு
கூடலூர்: தலைமை ஆசிரியரை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்
கூடலூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த எட்டாம் தேதி இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சசிகலாவை அதே பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் அசீமா அவரை தாக்கியதோடு தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
Govt Schoolpt desk
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொறுப்பு தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவின் பேரில் நடந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் அசீமாவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.