\
பட்டுக்கோட்டை: தேர்வு சரியாக எழுதவில்லை - 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டை: தேர்வு சரியாக எழுதவில்லை - 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

பட்டுக்கோட்டை: தேர்வு சரியாக எழுதவில்லை - 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

பட்டுக்கோட்டையில் தேர்வு சரியாக எழுதவில்லை என பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சூரிய பாண்டி என்பவரின் மகள் யோகேஸ்வரி (15). இவர், பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தவர் இந்நிலையில், தேர்வெழுதிவிட்டு பள்ளியில் இருந்த வீட்டுக்கு வந்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்,

இதையடுத்து நேற்றிரவு தனது வீட்டில்; தூக்கிட்டு தொங்கியவரை, அவரது தாயார் செல்லம்மாள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சீனிவாசனின் மனைவி சித்ரா ஆகியோர் யோகேஸ்வரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com