தமிழ்நாடு
ஆட்சேபமற்ற நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா..!
ஆட்சேபமற்ற நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா..!
ஆட்சேபமற்ற நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள் மற்றும் மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்து மற்ற இடங்களை ஆக்கிரமித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவோருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் சரிபார்த்து பட்டா வழங்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டும் இந்த அரசாணை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

