படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் அவதி - அரசு மருத்துவமனையின் அவலம்

படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் அவதி - அரசு மருத்துவமனையின் அவலம்

படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் அவதி - அரசு மருத்துவமனையின் அவலம்
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கள் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தினால் நோயாளிகளை மருத்துவர்கள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் கொசு தொல்லையும் அதிகம் இருப்பதால் நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com