\
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பழுதான லிப்ட்- 20 நிமிட போராட்டத்திற்கு பின் நோயாளிகள் மீட்பு

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பழுதான லிப்ட்- 20 நிமிட போராட்டத்திற்கு பின் நோயாளிகள் மீட்பு

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பழுதான லிப்ட்- 20 நிமிட போராட்டத்திற்கு பின் நோயாளிகள் மீட்பு
Published on: 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் லிப்ட் பழுதானதில் 3 நோயாளிகள் உள்ளே சிக்கினர். 20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் சிக்கிய 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மதுரை மற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில்  ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. லிப்டில் இருந்து கூச்சல் சத்தம் வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மருத்துவமனையில் இருந்த தொழில்நுட்ப ஊழியர்கள் லிப்டை சரி செய்தனர். 20 நிமிடமாக லிப்டில் சிக்கிய 3 நோயாளிகள் மீட்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com