தமிழ்நாடு
செஞ்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்குள் புகுந்த தண்ணீர்: நோயாளிகள் அவதி
செஞ்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்குள் புகுந்த தண்ணீர்: நோயாளிகள் அவதி
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாயினர்.
இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், செஞ்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த தண்ணீர் சிறிது நேரத்தில் பிரசவ வார்டுகளிலும் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் பெரிதும் அவதியுற்றனர். உடனே அங்கிருந்தவர்கள் வேறு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்கேன் எடுக்கும் இயந்திரம், ரத்த வங்கி ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மருத்து உபகரணங்கள் அனைத்தும் சேதமாகின.