\
அரசு மருத்துவரின் அலட்சியத்தால் ஒருவர் பலி

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் ஒருவர் பலி

அரசு மருத்துவரின் அலட்சியத்தால் ஒருவர் பலி
Published on

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் காந்திராஜ். இவர் வயிற்று வலி மற்றும் கால் வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காந்திராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காந்திராஜின் மரணத்திற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததே காரணம் என அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com