சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்

சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்
சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம்

சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கியுள்ளதை அடுத்து, முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையை இன்று முதல் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனும் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயணிகள் ஆர்வத்துடன் தங்கள் ரயில் பயணத்தை தொடங்கினர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு புறநகர் ரயில் சேவையைத் தொடக்கியுள்ள தெற்கு ரயில்வே பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அந்த வகையில், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயண நேரத்தைப் பொறுத்தவரையில், ஆண்கள் காலை 7 மணிக்கு முன்பாக, காலை 9.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை மற்றும் இரவு 7 மணிக்கு மேல் பயணிக்கலாம். பெண்கள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும், பெண் பயணிகளுடன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவை இல்லாத காரணத்தினால், விரைவு ரயில்களில் மாதாந்திர பயணச்சீட்டு வைத்து பயணம் செய்யக்கூடிய பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com