தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை கொண்டை ஊசி வளைவில் நிலை தடுமாறிய அரசு பேருந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சித்தேரி மலை கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்ப முயற்சித்தபோது கார் மீது உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. மலைச்சரிவின் விளிம்பில் இறங்கிய பேருந்து அந்தரத்தில் தொங்கியதால், பயணிகள் அலறினர். செய்வதறியாது கூச்சலிட்டனர். பின்னர் பேருந்தில் சிக்கியவர்கள் ஒருவர் பின் ஒருவராக பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆபத்தான மலைப்பாதைகளில் சாலைகள் பழுதடைந்து இருப்பதாகவும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

