மதுபோதையில் பயணிகளிடம் தகராறு: அரசு பேருந்து நடத்துநருக்கு தர்ம அடி – வீடியோ வைரலானதால் சிக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த நடத்துநரை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Conductor
Conductorpt desk

உளுந்தூர்பேட்டை பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வரும் குமார் என்பவர் சோதனை ஆய்வாளர்களை தாக்கிய சம்பவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் செல்லும் நகர பேருந்தில் மீண்டும் நடத்துநராக பணியை தொடரும் போது பயணிகளிடம் தகராறு செய்துள்ளார்.

Govt bus
Govt busjpt desk

அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதை வீடியோவாக பதிவு செய்த நபர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com