”நேரத்துக்கு பஸ் வருவதேயில்லை; அப்படியே வந்தாலும்”-வேதனையில் காட்பாடி பகுதி மக்கள் புகார்!
உரிய நேரத்துக்கு போதிய அரசு பேருந்து இல்லாததால் காட்பாடி - திருவலம் - ராணிப்பேட்டை பேருந்து வழித்தட பயணிகள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பிரம்மபுரம், சேவூர், சுகார்மில், திருவலம், ராணிப்பேட்டை சிப்காட், முத்துக்கடை வரை அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காலையும் மாலையில் பள்ளி, கல்லூரிக்கும் மற்ற பணிகளுக்கும் சென்று திரும்புவோர் அதிகம் பயணிக்கும் வழித்தடமாக இருந்து வருகிறது. இதில் 10A, 10d, 10c உள்ளிட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது இல்லை என்றும் குறித்த நேரத்துக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் தள்ளி நிற்பதாகவும் சில சமயங்களில் நிற்பதே கிடையாது என்றும் காலை வேளைகளில் சில நேரங்களில் ஒரே நேரத்தில் அனைத்து பேருந்தும் சென்றுவிடுவதாகவும் இல்லை என்றால் பேருந்தே வருவது கிடையாது என்றும் கூறுகின்றனர்.
மேலும் முக்கிய நேரமான காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் பேருந்துகள் நேரம் தவறி மிகுந்த காலதாமதத்துடன் இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்க்கு பள்ளிக்கோ அல்லது பணிக்கோ செல்ல முடிவது இல்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இடைப்பட்ட நேரங்களில் பெண்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்க்கும்போது சில பேருந்துகள் நிற்க்காமல் செல்வதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே இவ்வழிதடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறைபடுத்தி பயணிகள் பயணடையும் வகையில் முறையாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிக்க: உதகை - மேட்டுப்பாளையம் பாதையில் மீண்டும் மலை ரயில் சேவை