\
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி 

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி 

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி 
Published on: 

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிக்களை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை தொடங்கியுள்ளது. இந்தச் சேவையை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளார். அதில்,“தற்போது பயணிகள் தங்களின் மின்சார வாகனங்களை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்காக பயணிகள் ‘ELECTREEFI’ என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து தங்களுக்கான நேரத்தையும் முன்பதிவு செய்யலாம். அத்துடன் இந்தப் புதிய வசதி விரைவில் அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com