நெருப்பு வளைய சூரிய கிரகணம் - எங்கு? எவ்வளவு நேரம் தெரியும்?

நெருப்பு வளைய சூரிய கிரகணம் - எங்கு? எவ்வளவு நேரம் தெரியும்?

நெருப்பு வளைய சூரிய கிரகணம் - எங்கு? எவ்வளவு நேரம் தெரியும்?
Published on

நெருப்பு வளைய‌ சூரிய கிரகணம் தமிழகத்தில் எங்கெங்கு எவ்வளவு நேரம் தெரியும்? என்பதை பார்க்கலாம்.

அரிய நெருப்புவளைய சூரிய கிரகணம் தமிழகத்தின் கோவை, ஈரோடு , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலான சூரிய கிரகணமே தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூரிய கிரகணமானது காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் 3 நிமிடங்கள் வரை தெரியும் எனக் கூறப்படுகிறது. இதேபோல் திண்டுக்கல்லில் 2.50 நிமிடங்களும், சிவகங்கை மற்றும் காரைக்குடியில் 2 நிமிடங்களும் தெரியக்கூடும். கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகள் வரை தென்படகூடும் என கூறும் விஞ்ஞானிகள் மதுரையில் வெறும் 20 வினாடிகள் மட்டுமே தெரியும் என்றும் கூறுகின்றனர்.

ஒருமுறை ஒரு கிரகணத்தை குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் மீண்டும் அதே இடத்தில் கிரகணத்தை பார்க்க 350 ஆண்டுகளாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com