பரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம் 

பரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம் 

பரோட்டா‌ ஒரு ரூபாய், பிரியாணி ரூ.10 - அலைமோதிய மக்கள் கூட்டம் 
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் வழங்கியதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அந்தக் கடையில் குவியத் தொடங்கினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com