\
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு
Published on

மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு மேலும் 30நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 90 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று, கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஒரு மாதம் மட்டும் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து ஜோலர்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர் மருத்துவ சிகிச்சையின் காரணமாக, அவருக்கு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com