2024 பாராளுமன்ற தேர்தல்: மதுரையின் வெற்றி வேட்பாளர் நரேந்திர மோடி – கவனம் ஈர்த்த போஸ்டர்

2024 பாராளுமன்ற தேர்தல்: மதுரையின் வெற்றி வேட்பாளர் நரேந்திர மோடி – கவனம் ஈர்த்த போஸ்டர்

2024 பாராளுமன்ற தேர்தல்: மதுரையின் வெற்றி வேட்பாளர் நரேந்திர மோடி – கவனம் ஈர்த்த போஸ்டர்
Published on

2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி என ஒட்டபட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் அதற்கான பணிகள் மற்றும் வியூகங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடும் நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் போட்டியிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து வருகிற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும் பாஜக-வினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மதுரை தொகுதியில் வெற்றி வேட்பாளர் நரேந்திர மோடி என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பேசுபொருளாகியும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com