சென்னை தியேட்டர்களில் உயர்கிறது பார்க்கிங் கட்டணம்?.. ஐகோர்ட் உத்தரவின் பின்னணி!

சென்னை தியேட்டர்களில் உயர்கிறது பார்க்கிங் கட்டணம்?.. ஐகோர்ட் உத்தரவின் பின்னணி!
சென்னை தியேட்டர்களில் உயர்கிறது பார்க்கிங் கட்டணம்?.. ஐகோர்ட் உத்தரவின் பின்னணி!

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்க நிர்வாகம் சார்பில் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விமான நிலையத்தில் 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்திற்கு குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டி, 2017ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com