தமிழர் பண்பாட்டின் அடையாளம் ராஜராஜசோழன் - பாரிவேந்தர்

தமிழர் பண்பாட்டின் அடையாளம் ராஜராஜசோழன் - பாரிவேந்தர்
தமிழர் பண்பாட்டின் அடையாளம் ராஜராஜசோழன் - பாரிவேந்தர்

தமிழர்களின் ஆட்சி நிர்வா‌‌கம் மற்றும் கலை‌, பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ராஜராஜசோழன் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீர்மேலாண்மையில் முக்கியக் கவனம் செலுத்தியவர் ராஜராஜசோழன் என்று குறிப்பிட்டுள்ளார்.‌ இதனால் விவசாயம் செழித்தோங்கிய‌தோடு மக்கள் அனைவரும் அமைதியான, வளமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வழிவகுத்தவர் என்றும், தன்‌ நாட்டின் எல்லையில் வலிமையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி, மக்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்கியவர் ராஜராஜ சோழன் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார். 

பிறப்பின் அடிப்படையிலான சாதிய பாகுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல், தொழில்சார்ந்த திறமைக்கு முன்னுரிமை வழங்கியவர் ராஜராஜ சோழன் என்று அவர் தெரிவித்துள்ளார். குடிமக்களின் நிலவுடமைச் சமுதாயம் மட்டும் நடைமுறையில் இருந்த காலத்தை தற்போதைய நவீன ஜனநாயக அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசுவது வடிகட்டிய அறியாமையின் உச்சம் என்று பாரிவேந்தர் கூறியுள்ளார். 
பரந்து விரிந்‌த ஜனநாயகப் பார்வை கொண்டிருந்த மாபெரும் தமிழ் மன்னனை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும்‌ அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com