அர்ஜூனா விருது பெறும் மாரியப்பனுக்கு பாரிவேந்தர் வாழ்த்து
அர்ஜூனா விருது பெறும் பாரலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியவடகம்பட்டி கிராமத்தில் பிறந்த மாரியப்பன் இன்று உலகம் போற்றும் விளையாட்டு வீரராக உயர்ந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். மாரியப்பனின் வெற்றியை போற்றும் வகையில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டதையும் புதிய தலைமுறையின் தமிழன் விருதுகளில், மாரியப்பனுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டதையும் பாரிவேந்தர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாரியப்பனுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள பாரிவேந்தர், மாரியப்பனுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதுடன், மேலும் பல சாதனைகள் மூலம் அவர் போற்றப்பட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.