\
பெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

பெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

பெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை
Published on

வேலூரில் பெற்றோர் திட்டியதால் 11ஆம் வகுப்பு மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கொடையாஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சந்துரு பாட்டி வீட்டில் தங்கி அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் சந்துரு நாட்டம் இல்லாமல் இருப்பதாகவும், கவனக்குறைவுடன் செயல்படுவதாகவும் பெற்றோர் அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சந்துரு, இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இன்று காலை பாலாற்றிலுள்ள கிணற்றில் சந்துரு சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக மாணவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com