\
திருச்செந்தூர்:  மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்த இளைஞர்கள்..!

திருச்செந்தூர்: மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்த இளைஞர்கள்..!

திருச்செந்தூர்: மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்த இளைஞர்கள்..!
Published on

திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூரில் இரண்டு இளைஞர்கள் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் யோகரத்தினம் நகரில் வசித்து வருபவர் வேல்குமார் பொன்ராஜ். இவரது மகன் தூசி முத்து(18). வேல் குமாரின் தங்கை மகன் அஜித்குமார் (22). இவர்கள் இருவரும் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த இவர்கள் இருவரும் மதுபானத்தில் விஷ மருந்து கலந்து குடித்துத் தற்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com