\
“ஒரு வேளை சோறு” - கையேந்தி நின்ற பெற்றோர்கள் 

“ஒரு வேளை சோறு” - கையேந்தி நின்ற பெற்றோர்கள் 

“ஒரு வேளை சோறு” - கையேந்தி நின்ற பெற்றோர்கள் 
Published on

ஒரு வேளையாவது உணவளிக்க தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும்படி வருவாய்த்துறை அதிகாரியிடம் வயதான பெற்றோர்கள் முறையிட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில், வருவாய்த் துறை அதிகாரியின் தலைமையில்‌‌, மூத்த குடிமக்களின் நலம் மற்றும் பராமரிப்பு குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெற்றோர்களுக்கு‌ உணவு வழங்காமல், அவர்களை பிள்ளைகள்‌ அடித்து துன்புறுத்துவது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ‌நடைபெற்றது. 

அப்போது ஒரு வேளை உணவையாவது அளிக்கச் சொல்லுங்கள் என வயதான பெற்றோர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. பிள்ளைகள் தங்கள் சொத்துகளை பறித்துக்கொண்டு, தங்களை கேட்பாரின்றி விட்டு விட்டதாகவும் பல பெற்றோர் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com