"அட்டகாசம் தாங்க முடியவில்லை" மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர் - அதிர்ச்சி பின்னணி?

செங்கோட்டை அருகே மதுபோதையில் ரகளை செய்த மகனைப் பெற்றோர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகைதீன் அப்துல்காதர்-செய்யது அலி
முகைதீன் அப்துல்காதர்-செய்யது அலி file image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பிஸ்மி தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர். இவருடைய மகன் முகம்மது சித்திக் (25). இவர் கடந்த 5தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முகம்மது சித்திக்
முகம்மது சித்திக்

இந்தநிலையில், இறந்து போன சித்திக்கின் கழுத்தில் காயங்கள் இருந்தது முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சித்திக்கின் பெற்றோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து பெற்ற மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

முகைதீன் அப்துல்காதர்-செய்யது அலி
அரசு பள்ளி மாணவர்களின் வீட்டிற்கு சென்று அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர் - என்ன காரணம் தெரியுமா?

மேலும் முகமது சித்திக் வேலைக்கு எதுவும் சொல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். பலமுறை கண்டித்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்திக்கின் தந்தை அப்துல்காதா்(51) தாய் செய்யது அலி பாத்திமா (39) பாத்திமாவின் சகோதரர் மற்றும் திவான்ஒலி(39) ஆகிய 3 பேரும் கடந்த 5தேதி அவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

திவான் ஒலி
திவான் ஒலி

பின்னர் சித்திக் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி போலீசில் புகார் செய்து, கொலை செய்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகனை உறவினர்களுடன் சேர்ந்து பெற்றோர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகைதீன் அப்துல்காதர்-செய்யது அலி
வேலையின்மையால் வந்த பிரச்னை... குழந்தைகள் கண்முன்னே தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com