\
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்pt web

சென்னை: தனியார் பள்ளியில் வாயுக்கசிவு.. மாணவ மாணவியருக்கு மயக்கம்.. பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம்

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு காரணமாக 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மயக்கமடைந்த நிலையில், பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Published on

திருவொற்றியூர் கிராமதெரு எனும் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு மூச்சுத் திணறல், தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மயக்கமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு காரணத்திற்காக மற்ற மாணவர்களும் உடனடியாக பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளிக்கு விரைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதனிடையே, பள்ளி வளாகத்தில் குவிந்த பெற்றோர்கள், காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com