பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் ஏகனாபுரம் மக்கள் போராட்டம்!

பரந்தூர் விமானநிலைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகானபுரத்தில் அரசுப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
paranthur airport
paranthur airportpt desk

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவது குறித்து மத்திய மாநில அரசுகள் அறிவித்த நாள் முதலே ஏகனாபுரம் ஊர்மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல் முறையாக பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கனமழை புயலின் போது ஒரு வாரத்திற்கு மேலாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

People protest
People protestpt desk

இந்த நிலையில் மீண்டும் ஏகனாபுரம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளிக்கு மாணக்கர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து போராட்டம் நடத்துபவர்களிடம் வட்டார கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் கல்வித்துறை அமைச்சர் எங்களை நேரில் வந்து பார்த்து பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே நாங்கள் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடும் ஏகனாபுரம் மக்கள்!

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்... ”ஐயா, நாங்கள் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுவதுமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். என்னுடைய பிள்ளைகள் மூன்று பேர் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை கவர்மெண்ட் மூன்று ஆர்ட்டிக்கல் மூலமாகவே சொல்றாங்க. குழந்தைகளை கட்டாயக்கல்வி என்று சொல்லி ஆர்ட்டிக்கல் 45-ல் கொண்டு வந்திருக்கீங்க. அப்படி இருக்கும்போது நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பணும்தான். ஆனால், எங்களுக்கு வேற வழி தெரியல.

கருப்பு கொடியை பறக்கவிட்ட பரந்தூர் மக்கள்
கருப்பு கொடியை பறக்கவிட்ட பரந்தூர் மக்கள்PT

எங்களுடைய முழு வாழ்வாதாரமுமே விவசாயம் தான், கிராமங்களில் நிம்மதியாக நாங்கள் வாழ்கிறோம்.

எங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கிறீங்க. எங்களுடைய முழு வாழ்வாதாரமுமே விவசாயம் தான். கிராமங்களில் நிம்மதியாக நாங்கள் வாழ்கிறோம். இப்போது வந்த பெரும் மழையில் சென்னை மக்கள் எப்படி தத்தளித்தார்கள் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். கிராம பகுதிகளில் ஒரு சொட்டு மழை தேங்கியதாக நீங்களே சொல்லுங்க. அந்த காலத்தில் மன்னர்கள் அழகா அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இந்த பகுதியை விட்டு எங்களை அனுப்பனும்னு சொல்றீங்களே, இதே நிலமைதானே நீங்கள் அனுப்புற இடத்துல, நல்லா இருக்கும்னு சொல்றீங்க. சுனாமி நகர் குடியிருப்பை எல்லாம் காண்பித்தீர்கள். அங்கெல்லாம் ஃபுல்லா தண்ணி. எங்கள அதுபோல ஒரு அவதியா பின்னாளில் அவஸ்தைபடச் சொல்றீங்களா.

இந்திய வரைபடத்தில் இருந்து எங்கள் ஊரை துடைத்து எடுக்கும் முயற்சி

நாங்கள் அரசாங்கதை எதிர்த்து இந்த புறக்கணிப்பை செய்யல. உங்க வளர்ச்சியை நாங்க தடுக்கல. ஆனால் வளர்ச்சி இந்த பகுதியில வேண்டாம். முழுமையாக விவசாயத்தில் வளர்ச்சியடைந்த பகுதியாக எங்க பகுதி இருக்கும்போது, அத அழிக்கப் போறோம்னு சொல்றது எப்படி சாத்தியம்னு புரியல. எங்களுடைய பகுதியில முழுக்க முழுக்க படித்துள்ள இளைஞர்களின் முதல் தொழிலாக விவசாயத்தை தான் நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம். அதற்கு அடுத்துதான் மற்ற வேலைகள் எல்லாம். எங்களது முழு முதல் தொழிலான விவசாயத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இந்திய வரைபடத்தில் இருந்து எங்கள் ஊரை துடைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.

முதல் தொழிலாக விவசாயத்தை தான் நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம். அதற்கு அடுத்துதான் மற்ற வேலைகள் எல்லாம். எங்களது முழு முதல் தொழிலான விவசாயத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இந்திய வரைபடத்தில் இருந்து எங்கள் ஊரை துடைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.
flight
flightfile

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பு தரும் என்ற நம்பிக்கையில் தான் இந்த அறவழி போராட்டம்

எங்களது வாழ்வாதாரத்திற்காக எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது தப்பு என்று தோன்றவில்லை. எங்களது அடிப்படை உரிமைக்காக அறவழியில் போராடுறோம். கவர்மெண்ட் எங்களை சந்திக்க வேண்டுமென்றால் இதுதான் வழி. நாங்கள் அராஜகமாக போக எங்களுக்கு விரும்பம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பு தரும் என்ற நம்பிக்கையில் தான் இந்த அறவழி போராட்டமே. ஆனால் கல்வி புறக்கணிப்பு என்பது முழுவதும் அரசாணையை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டத்தை நடத்துவோம்.

கவர்மெண்ட் எங்களை சந்திக்க வேண்டுமென்றால் இதுதான் வழி. நாங்கள் அராஜகமாக போக எங்களுக்கு விரும்பம் கிடையாது.

எங்கள் குழந்தைகள் கல்வியால் எந்த அளவுக்கு பாதிப்படைவார்கள் என்பதை நினைக்கும்போது கஷ்டமாகதான் இருக்கிறது. நாங்கள் படித்த இளைஞர்கள் இருக்கோம். ஆசிரியர்கள் போல் வகுப்பு எடுக்கத் தெரியாவிட்டாலும், எங்களால் முடிந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்துக் கொள்கிறோம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் தேவையை அறிந்து அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர்கள் போல் வகுப்பு எடுக்கத் தெரியாவிட்டாலும், எங்களால் முடிந்த அளவுக்கு குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்துக் கொள்கிறோம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com