மூதாட்டி மர்ம மரணம்
மூதாட்டி மர்ம மரணம்pt desk

பரமக்குடி | மூதாட்டி மர்ம மரணம்... நகைகள் மாயம்... வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

பரமக்குடியில் 92 வயது மூதாட்டி மரணமடைந்த நிலையில் அவரது நகைகள் மாயமாகி உள்ளன. இதுகுறித்து அவரது வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த இக்னேசியஸ் என்பவரி;ன மனைவி ஞானசௌந்தரி (92).. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில், பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை மூதாட்டி ஞானசௌந்தரி உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். இது குறித்து வேலைக்கார பெண் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பரமக்குடி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார், உயிரிழந்த மூதாட்டி ஞானசௌந்தரியின் வீட்டில் ஆய்வு செய்தனர்.

மூதாட்டி மர்ம மரணம்
கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்து - 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

அப்போது, மூதாட்டி அணிந்திருந்த செயின், தோடு உட்பட ஏழரை சவரன் நகை மாயமாகியுள்ளது. இதுகுறித்து வேலைக்கார பெண் அன்னலட்சுமியிடம் பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com